ஸூரா Al-A'raf, வசனம் 36

7:36

وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَٱسۡتَكۡبَرُواْ عَنۡهَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ٣٦

36. (எனினும்) எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றைப் புறக்கணித்து கர்வம் கொள்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள்.

தஃப்ஸீர்

7.36. நம்முடைய வசனங்களின் மீது நம்பிக்கைகொள்ளாமல் அவற்றை நிராகரிப்பவர்கள், கர்வத்தினால் தங்களின் தூதர்கள் கொண்டுவந்ததன்படி செயல்பட மறுப்பவர்கள்தாம் நரகவாசிகள். அங்கு அவர்கள் என்றென்றும் வீழ்ந்துகிடப்பார்கள்.