فَلَمَّا نَسُواْ مَا ذُكِّرُواْ بِهِۦٓ أَنجَيۡنَا ٱلَّذِينَ يَنۡهَوۡنَ عَنِ ٱلسُّوٓءِ وَأَخَذۡنَا ٱلَّذِينَ ظَلَمُواْ بِعَذَابِۭ بَـِٔيسِۭ بِمَا كَانُواْ يَفۡسُقُونَ ١٦٥
165. அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டதை அவர்கள் (பொருட்படுத்தாது) மறந்து (தொடர்ந்து மீன் பிடிக்க முற்பட்டு)விடவே, பாவத்திலிருந்து விலக்கி வந்தவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டு வரம்பு மீறியவர்களை அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக கொடிய வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டோம்.
தஃப்ஸீர்
7.165. பாவிகள் தமக்கு அறிவுரை கூறுவோர் ஞாபகமூட்டியதைப் புறக்கணித்து, தவிர்ந்து கொள்ளாத போது தீமையைத் தடுத்த கூட்டத்தினரை வேதனையிலிருந்து நாம் காப்பாற்றி சனிக்கிழமையில் மீன்பிடித்து வரம்புமீறிக் கொண்டிருந்தவர்களை, அவர்கள் அல்லாஹ்வுக்கு அடிபணியாமல் பாவங்களில் நிலைத்திருந்ததனால் கடுமையான வேதனையால் தண்டித்தோம்.