ஸூரா Al-An'am, வசனம் 41

6:41

بَلۡ إِيَّاهُ تَدۡعُونَ فَيَكۡشِفُ مَا تَدۡعُونَ إِلَيۡهِ إِن شَآءَ وَتَنسَوۡنَ مَا تُشۡرِكُونَ ٤١

41. அவ்வாறன்று! நீங்கள் இணைவைத்தவற்றை எல்லாம் மறந்துவிட்டு அவனையே அழைப்பீர்கள். நீங்கள் எ(வ்வேதனையை நீக்குவ)தற்காக அவனை அழைப்பீர்களோ அதை அவன் விரும்பினால் நீக்கியும் விடுவான்.

தஃப்ஸீர்

6.41. உண்மையில் உங்களைப் படைத்த அல்லாஹ்வையே நீங்கள் அழைப்பீர்கள். அப்பொழுது அவன் நாடினால் உங்களது துன்பத்தைப் போக்கி, தீங்கினை அகற்றுவான். அவனே இதற்குப் பொறுப்பாளன், ஆற்றல்மிக்கவன். அல்லாஹ்வுடன் இணையாக்கிய உங்களின் தெய்வங்களை - அவற்றால் உங்களுக்குப் பலனோ, தீங்கோ அளிக்கமுடியாது என்பதை நீங்கள் அறிந்திருப்பதால் - விட்டுவிடுவீர்கள்.