وَمَا تَأۡتِيهِم مِّنۡ ءَايَةٖ مِّنۡ ءَايَٰتِ رَبِّهِمۡ إِلَّا كَانُواْ عَنۡهَا مُعۡرِضِينَ ٤
4. (இவ்வாறிருந்தும், நிராகரிப்பவர்களோ) தங்கள் இறைவனின் வசனங்களில் எது வந்தபோதிலும் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.
தஃப்ஸீர்
6.4. இணைவைப்பாளர்களிடம் - அவர்களின் இறைவனிடமிருந்து - எந்தவொரு சான்றையும், அற்புதத்தையும் நீர் கொண்டுவந்தாலும் அவர்கள் அதனைப் பொருட்படுத்தாதவர்களாக புறக்கணித்து விடுகிறார்கள். அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய, தூதர்களை உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான சான்றுகளும் ஆதாரங்களும் அவர்களிடம் வந்தே இருக்கின்றன. இருந்தும் அவர்கள் அலட்சியமாக அதனைப் புறக்கணித்து விட்டனர்.