قُلۡ إِنِّيٓ أَخَافُ إِنۡ عَصَيۡتُ رَبِّي عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ ١٥
15. (நபியே! மேலும்,) கூறுவீராக: ‘‘என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால், மகத்தான நாளின் வேதனையை(யும் தண்டனையையும்) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.''
தஃப்ஸீர்
6.15. தூதரே! நீர் கூறுவீராக: “நான் என் இறைவனின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு அவன் தடைசெய்த ஷிர்க் போன்ற பாவங்களில் ஈடுபட்டால் அல்லது அவன் கட்டளையிட்ட நம்பிக்கை மற்றும் ஏனைய வணக்கவழிபாடுகளை விட்டுவிட்டால் மறுமை நாளில் அவன் என்னைக் கடுமையாக வேதனை செய்வான் என்பதை அஞ்சுகிறேன்.