ஸூரா Al-An'am, வசனம் 127

6:127

۞ لَهُمۡ دَارُ ٱلسَّلَٰمِ عِندَ رَبِّهِمۡۖ وَهُوَ وَلِيُّهُم بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ١٢٧

127. அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் சாந்தியும் சமாதானமும் உள்ள சொர்க்கமுண்டு. அவர்கள் செய்து கொண்டிருந்த (நற்)செயல்களின் காரணமாக அவன் அவர்களுடைய நேசன் ஆவான்.

தஃப்ஸீர்

6.127. அனைத்துத் தீங்குகளில் இருந்தும் பாதுகாப்புக் கிடைக்கும் சுவன இல்லம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் செய்த நற்செயல்களுக்குக் கூலியாக அல்லாஹ்தான் அவர்களுக்கு உதவியாளன்; அவர்களை வலுப்படுத்தக்கூடியவன்.