லைலத்துல் கத்ர் 2028

எதிர்பார்க்கப்படும் தேதி

வியாழன், 17 பிப்ரவரி, 2028

21 ரமலான் 1449 ஹிஜ்ரி

இரவு புதன், 16 பிப்ரவரி, 2028 அன்று சூரியன் மறையும் போது தொடங்குகிறது.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2028 வரை

தேதிகள் சவூதி அரேபியாவின் உம்முல் குரா நாட்காட்டியின்படி உள்ளன. உள்ளூரில் பிறை பார்த்து மாதம் தொடங்கும் இடங்களில் தேதி ஒரு நாள் முன்னதாகவோ பின்னதாகவோ இருக்கலாம்.

லைலத்துல் கத்ர், அதாவது மாண்புமிக்க இரவு, ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. இது ரமலானின் கடைசி பத்து இரவுகளில் ஒன்று, பெரும்பாலும் ஒற்றைப்படை இரவு. அதன் சரியான தேதி தெரியாது. பல முஸ்லிம்கள் 27 ஆம் இரவுக்குச் சிறப்புக் கவனம் செலுத்துகின்றனர்.

கடைசி பத்தின் ஒற்றைப்படை இரவுகள்

இரவுசூரியன் மறையும் போது தொடங்கும் நாள்
21 ரமலான்புதன், 16 பிப்ரவரி, 2028
23 ரமலான்வெள்ளி, 18 பிப்ரவரி, 2028
25 ரமலான்ஞாயிறு, 20 பிப்ரவரி, 2028
27 ரமலான்செவ்வாய், 22 பிப்ரவரி, 2028
29 ரமலான்வியாழன், 24 பிப்ரவரி, 2028

குர்ஆன் மற்றும் சுன்னாவிலிருந்து

ஹதீஸ்

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «مَنْ يَقُمْ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் லைலதுல் கத்ர் (கண்ணியமிக்க) இரவில் நின்று வங்கியவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படும்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர் · சரியானது
விளக்கம்

ரமழானில் இறுதிப்பத்தில் வரக்கூடிய லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குவதின் சிறப்பு குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிரஸ்தாபித்துள்ளார்கள். அவ்விரவில் தொழுகை பிரார்த்தனை அல்குர்ஆன் பாராயணம்,திக்ர் போன்ற விடயங்களில் யார் தன்னை ஈடுபடுத்தி,அவ்விரவையும் அது பற்றி இடம்பெற்றுள்ள சிறப்புகளையும் நம்பிக்கை கொண்டு, நற்கருமங்கள் செய்வதன் மூலம் அல்லாஹ்வின் நன்மையை எதிர்பார்த்து, முகஸ்துதியோ பிறருக்கு காட்டும் நோக்மோ இன்றி அவ்விரவில் நின்று வணங்கினால் அவரின்; முன் செய்த அனைத்து சிறு பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.

HadeethEnc.com இல் படிக்கவும்

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَحَرَّوْا لَيْلَةَ القَدْرِ فِي الوِتْرِ مِنَ العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ».
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் : ரமழானின் இறுதிப்பத்தில ஒற்றைப்படையான இரவுகளில்; 'லைலத்துல் கத்ர்' இரவைத் தேடிக்கொள்ளுங்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர் · சரியானது
விளக்கம்

ரமழானில் இறுதிப்பத்துகளில் நற்செயல்களை அதிகம் செய்வதன் மூலம் லைலத்துல் கத்ர் இரவை அடைந்து கொள்வதற்கு பாடுபடுமாறும் சிறப்பு கவனம் செலுத்துமாறு நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் மக்களை ஊக்குவித்துள்ளார்கள். இந்த இரவு ஒவ்வொரு ஆண்டும் ரமழானின் கடைசி பத்து நாட்களில் 21, 23, 25, 27 மற்றும் 29 போன்ற ஒற்றைப் படையான இரவுகளில் வருவதற்கான வாய்ப்பு மிகவும் உள்ளது.

HadeethEnc.com இல் படிக்கவும்

عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنينَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ أَحْيَا اللَّيْلَ، وَأَيْقَظَ أَهْلَهُ، وَجَدَّ وَشَدَّ الْمِئْزَرَ.
உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : ஆஇஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: (ரமழானின் இறுதிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்தி(வழிபாடுக்கு ஆயத்தமாகி)விடுவார்கள்; இரவில் (இறைவனை வழிபட்டு) விழித்திருப்பார்கள்; (இறை வழிபாட்டிற்காக) தம் குடும்பத் தாரை எழுப்பிவிடுவார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர் · சரியானது
விளக்கம்

ரமழானின் கடைசிப் பத்து நாட்கள் வந்தவுடன், இரவு முழுதும் நபி (ஸல்) அவர்கள் பல்வேறு வழிபாடுகளில் ஈடுபடுவார்கள், தங்கள் குடும்பத்தினரை தொழுகைக்காக எழுப்புவார்கள். வழமையை விட அதிகமாக வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அத்துடன் உடலுறவு கொள்வதிலிருந்தும், மனைவியரிடமிருந்தும் விலகி இருப்பார்கள்.

HadeethEnc.com இல் படிக்கவும்

இதையும் பார்க்கவும்

பிற ஆண்டுகள்

பிற சிறப்பு நாட்கள்

கேள்விகள்

லைலத்துல் கத்ர் 2028 எப்போது?

லைலத்துல் கத்ர் 2028 இரவு புதன், 16 பிப்ரவரி, 2028 அன்று சூரியன் மறையும் போது தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உம்முல் குரா நாட்காட்டியில் 21 ரமலான் 1449 ஹிஜ்ரி க்கு முந்தைய இரவு.

லைலத்துல் கத்ர் தேதி உறுதியானதா?

புதிய பிறை பார்க்கப்படும் வரை உறுதியில்லை. பல நாடுகள் மாதத் தொடக்கத்தை முந்தைய நாள் மாலையில் அறிவிக்கின்றன. அதனால் தேதி ஒரு நாள் மாறலாம்.

லைலத்துல் கத்ர் எந்த இரவு?

சரியான இரவு யாருக்கும் தெரியாது. கடைசி பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் அதைத் தேடும்படி நபி ﷺ கூறினார்கள்: 21, 23, 25, 27 மற்றும் 29 ஆம் இரவுகள்.